பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


நடுத்தர வகுப்பு

“நடுத்தர வகுப்பே மிகவும் கேடானது. அந்த வகுப்பில் உள்ள பெண்களுக்கு மனைவி நிலையும், தாய்மை நிலையும் தவிர, வேறு தொழில் இல்லை. தொழில் இல்லாதப் பெண்களுக்கு வாழ்வதற்கு வேறுவழியும் இல்லை.”


அவர்களைப் பற்றி என்ன கவலை?

“நாகரிகம் மிகுந்த இடங்களில் சமய உணர்வு இல்லாதவர்கள் கோயிலுக்குப் போகிறார்கள். இசை ஞானம் இல்லாதவர்கள் இசையரங்குகளுக்குச் செல்கிறார்கள். நாடக ரசனை இல்லாதவர்கள் நாடக மன்றங்களுக்குப் போகிறார்கள். இவை அதிகரித்துவிட்டன!

அதன் பயனாக, கோயில் வழிப்பாட்டு பத்து நிமிடங்களில் சுருக்கமாக நடத்தும் அளவு குறைக்கப்பட்டிருக்கின்றது, நாடகங்களும் கூட இரண்டு மணி அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு இதைப் பற்றிக் கவலை இல்லை. கணக்குத் தெரியாதவர்களைப் பற்றி ஐன்ஸ்டின் எப்படிக் கவலைப்படுவதில்லையோ அப்படியே நானும் இவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.”