பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

71


இயந்திரமும் மனிதனும்

“சக்கரம் முதலான உருளைகளில் பட்டவுடன் காலையோ, கையையோ வெட்டி, நசுக்கி எறியக்கூடிய் இயந்திரத்தை எந்த மனிதனும் அழிக்க விரும்புவதில்லை.

“ஆனால், ஒரு மனிதன் மற்றொருவனுக்குச் சிறு கெடுதல் செய்தாலும்கூட அவனைக் கொல்ல முற்படுவது இயல்பாக இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? இயந்திரமானது மனிதனைப் போன்றது அல்ல, ஆகையால் அதனிடம் அன்பு செலுத்தவும் முடியவில்லை. பகைக்கவும் முடியவில்லை. ஆனால், கெடுதல் செய்தவன் நம்மைப் போன்ற மனிதன், ஆகையால் இவை இயலும்.”


அடிக்கும் தொழில்

“சண்டை போடுபவர்களாகவும் முரடர்களாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் ஊக்கம் மிக்கவர்களாகவும், வேலை குறைந்தவர்களாகவும் இருப்பவர்களே. எனக்குத் தெரிந்த உதாரணம் ஒன்று “தினமும் மனைவியை அடித்துக் கொண்டிருக்கும் வழக்கம் உள்ள ஒருவன், மேளம் அடிக்கும் தொழில் மேற்கொண்ட பிறகு மனைவியை அடிக்கும் அந்த வழக்கத்தையே விட்டு விட்டான்.”