பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்




நம்முடைய அனுபவம்

“நம்மைக் காட்டிலும் கீழானவர்கள் எவரையும் துன்புறுத்தலாம் என்று நம்பும்படியாக நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால், நாம் சிறுவர்களாக இருந்தபோது, நம்முடைய பெற்றோரும் ஆசிரியர்களும் நமக்கு இழைத்த துன்பங்களால் நாம் அடைந்த அனுபவம் அத்தகையது".


எல்லாமே சிறைதான்!

“மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளைப் பார்த்துச் சிறையில் அடைபட்டிருக்கும் கைதி பொறாமைப்படுகிறான். அதற்குக் காரணம் என்ன? தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் அந்த விலங்குகளைப் பார்க்க வருகின்றனர். அந்த விலங்குகளைச் சீர்த்திருத்த வேண்டும் என்று வீணாக முற்படுவதில்லை. சிறைவாழ்வில் இந்த நன்மைகள் இல்லை. அப்படி இருந்தும் சிறை வாழ்வை அவ்வளவு கொடுமையாகக் கருதுவதில்லை. ஏனென்றால், பெரும்பான்மையான மக்கள் இளமையிலிருந்தே சிறை வாழ்வில் பழக்கப்பட்டவர்கள். பள்ளிக்கூடம், தொழிற்சாலை, அலுவலகம் ஆகியவை சிறைகளே. வீடும் கூட ஒரு சிறைதானே!”