பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


அப்பாவி பொதுமக்கள்

ஆட்சிசெய்வோர், தங்கள் உத்தரவுகளுக்குக் காரணம் கூறி, விளக்காமல் இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் காரணம் கூறினாலும் தெரிந்துகொள்ள முடியாத பொதுமக்கள் இருந்தால் என்ன செய்ய இயலும்.

அரசியல், தொழில், குடும்பம் ஆகியவற்றில் உள்ள ஆட்சி முறையானது, பெரும்பாலும் ஆணையிடுவதாலும் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதாலுமே நடைபெற வேண்டியதிருக்கிறது. ‘காரணம் கேட்கக்கூடாது; சொன்னபடி செய்’ என்னும் சொற்களைக் குழந்தைகளிடத்திலும் இராணுவ வீரர்களிடத்திலும் சொல்வது போலவே, ஏறக்குறைய எல்லோரிடத்திலும் சொல்ல வேண்டியிருக்கின்றது. நல்ல காலமாக, பொதுமக்களில் பெரும்பாலோர் காரணத்தை ஆராய விரும்புவதில்லை. சிந்திப்பது ஒரு தொல்லை என்று அதற்கு இடம் தராமல் தப்பித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

திறமையான சிந்தனையாளர்களோ, தங்களுக்குத் தெரிந்த துறையில் மட்டும் சிந்தித்துப் பார்த்து, அந்த அளவில் அமைதியோடு இருந்து வருகின்றனர்.

மற்ற துறைகளில் போலீசார், தையற்காரர், தச்சர் முதலானோர் சொல்வதைக் கேட்டு அப்படியே தயங்காமல் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். விளக்கம் கேட்பதும் இல்லை. சொன்னால் கேட்பதும் இல்லை.”