பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

75


திருட்டில் வேறுபாடு

“இன்று சிறையில் அடைபட்டிருக்கும் திருடன் மற்றவர்களைக் காட்டிலும் நேர்மையற்றவன் என்றோ, உண்மையற்றவன் என்றோ சொல்ல முடியாது, அறியாமையால், சமுதாய வழக்கத்திற்கு மாறான வழியில் திருடியவனே பெரும்பாலும் திருடனாகக் கருதப்படுகிறான். அவனே சிறைக்கும் செல்கிறான். ஆனால், அவனைப் போன்ற மற்றொருவன் தகுந்த முறையைப் பின்பற்றுவதால் பாராளுமன்றத்துக்குப் போகிறான்.”


திருமணம் எதற்கு?

திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பெண்கள் மட்டும் விரும்பவில்லை. ஆண்களும் விரும்புகிறார்கள். திருமணத்தால் நன்மை ஏற்படும் என்ற கருத்தில் அதை சிலர் விரும்புகிறார்கள்.

தனி வாழ்க்கையில் செலவு அதிகம், நலமும் குறைவு என்னும் பயனைக் கணக்கிட்டு, மனைவியால் அதிகச் செலவு இல்லாமல் வீட்டுக் கடமைகள் நிறைவேறுவதால் பயன் உண்டு என்று கருதி சிலர் திருமணம் செய்து கொள்கின்றனர்.”