பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


குழந்தைப் பாசம்

குழந்தைச் செல்வம் இல்லாதவர்களே, மற்றவர்களைக் காட்டிலும் அதிக அளவில் திருமண ரத்துச் செய்து கொள்ளுகின்றனர். பெற்றோரின் திருமண ரத்துக்கு குழந்தைகளே தடையாக இருக்கின்றன.

கணவன் — மனைவி இருவருக்கும் குழந்தைகளிடத்தில் பொதுவான அக்கறை இருப்பதே அதற்குக் காரணம்.

குழந்தைகள் இல்லையானால் எத்தனையோ குடும்பங்களில் கணவன் — மனைவி வாழ்க்கை முறிந்து போயிருக்கும்.


பிரிந்து செல்வது

“பறவைகள் கூடுகளிலிருந்து பறந்து போவதுபோல் குழந்தைகள் போதிய வளர்ச்சி அடைந்த பிறகு, தாய்மார்களிடமிருந்து பிரிந்து போய்விடவேண்டும். அதுவே தாய்மைக்குக் கடமை ஆகும்”.


உரிமையில் வேறுபாடு

“செல்வந்தர் சமுதாயத்துக்கு எந்தவிதமான தொண்டும் செய்யாமலேயே வாழ்ந்து வருகிறார். ஆனால், அவருடைய நிலத்தின் மீது உள்ள உரிமையோ பரம்பரை பரம்பரையாக (வழி வழியாக) பாத்தியம் கொண்டாடப்பட்டு வருகிறது.