பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்




ஏன் என்பது ஒழிய வேண்டும்

கணவனும் மனைவியும், திருமண ரத்துக்காக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரும்போது, “நீங்கள் ஏன் பிரிந்துவிட விரும்புகிறீர்கள்?” என்ற ஒரு கேள்விமட்டும் கேட்கவே கூடாது. தடை இல்லாமல் ரத்து உரிமை அளிக்கப்படவேண்டும்.

“ஏன் பிரிகிறீர்கள்” என்று கேட்கும் வழக்கம் இருப்பதால், ஒருவர் மற்றொருவர் மீது குறை கூற முன்வருகின்றனர். அதற்காக இல்லாததையும், பொல்லாததையும் கூறுகின்றனர். உலகத்தாறும் அவற்றை விரும்பி எதிர்பார்க்கின்றனர்.

ஏன் என்ற கேள்வியே ஒழிந்தால், எல்லாம் சீராகும், வழக்குகளும் குறையும்.

பெண்களுக்குப் பொருளாதார உரிமை வந்தால், பெண்ணின் பிற்போக்கும், அடிமைத்தனமும் அடியோடு ஒழியும் போலி மணமும் அழியும்.


பெண்ணுக்கு உரிமை

“அரசியலில் மக்கள் ஆட்சி நடைபெறும்போது ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையுடையவர்களாக இடம்பெற வேண்டும். ஏனென்றால் பெண்களுக்கு உள்ள