பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


என்பதையும் நான் நன்கு அறிவேன். ஆகையால், பெண்கள் மட்டுமே நடத்துமாறு ஏற்படும் அரசியலில் ஓர் ஆபத்தும் உள்ளது. பெண்கள், ஆண்களைக் காட்டிலும் அதிகாரத்தை மிகவும் விரும்புகிறவர்கள். அதனால் ஆண்களின் மீது பொறாமை கொண்டு அவர்களை அளவுக்கு மேல் உண்ணவும், உடுக்கவும் செய்து, புகழவும் புகழ்ந்து, முற்றிலும் பயனற்றவர்களாக ஆக்கி வாக்குரிமை இழந்துவிடச் செய்துவிடுவார்கள். இந்த இடையூறு இருப்பதால் நூற்றுக்கு ஐம்பது வீதம் இருபாலரும் இடம் பெறுவதே நல்லது” என்று கூறுகிறார் ஷா.


நோபல் பரிசு எதற்கு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு, 1925-ல் ஷாவுக்கு அளிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதைப் பற்றி ஷா:

“இந்த ஆண்டில் எந்த நூலையும் எழுதி நான் வெளியிடவில்லை. உலகம் அதைக் கண்டு விடுதலை உணர்ச்சியோடு மகிழ்ந்து எனக்கு நன்றி பாராட்டிச் செய்த செயல் இது என்று கூறியதோடு, பரிசு வேண்டியதில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார்.

“இந்தப்பரிசால் கிடைக்கும் பணம், கடலில் தத்தளித்து, நீந்திக் கரையேறிவிட்ட ஒருவனுக்காகன்றியப்பட்ட ‘உயிர் காப்புச் சாதனம்’ போன்றது” என்று பதில் எழுதினார் ஷா.