பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

81


அவர் நோபல் பரிசை ஏற்க மறுத்ததும், “நீங்கள் வளத்தோடு வாழ்வதால், எங்களுக்குக் கொடுத்து உதவுங்கள்” என்ற கோரிக்கைகள் ஏராளமாக வந்தன.

ஷாவுக்கு இது தொல்லையாக இருந்தது. கடைசியில் பரிசைப் பெற்றுக்கொள்ள இசைந்தார். இங்கிலாந்துக்கும் சுவீடனுக்கும் இலக்கியத் தொடர்பு ஏற்படுத்தும் தொண்டுக்கு அந்தத் தொகையை அளித்துவிட்டார்


கொள்ளைக்காரர்கள்

கொள்ளைக்காரனைப் பார்த்து, “தாங்கள் யார்?” என்று கேட்கிறார் ஒரு முதலாளி.

“நான் கொள்ளைக்காரன், பணக்காரர்களைக் கொள்ளையடித்து வாழ்கிறேன். தாங்கள் யார்?” என்று கேட்கிறான் கொள்ளைக்காரன்.

“நான் முதலாளி; ஏழைகளைக் கொள்ளையடித்து வாழ்கிறேன்" என்கிறார் முதலாளி.

(ஷாவின் நாடகத்தில் இப்படி ஒரு குறிப்பு)


எத்தனை வயது?

நாகரிக மங்கை ஒருத்தி ஷாவைப் பார்க்க வந்திருந்தாள். சிறிது நேரம் உரையாடலுக்கு மத்தியில்,