பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


”மிஸ்டர் ஷா என்னைப் பார்த்தால் எவ்வளவு வயது இருக்கும் என்று தெரிகிறதா?” என்று பெருமையோடுகேட்டாள் அவள்.

அவளை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார் ஷா.

புன்னகையோடு, ஷா என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்பார்த்திருந்த அந்த மங்கையை நோக்கி, “மங்கையே, உங்கள் பல்லைக் கவனித்தால் பதினெட்டு வயது இருக்கும் என்று தெரிகிறது. தலை முடியைப் பார்த்தால் பத்தொன்பது இருக்கலாமோ என்று தோன்றுகிறது. நீங்கள் நடந்து கொள்கிற தன்மையைப் பார்த்தால் பதினான்கு வயது பெண்ணைப் போல் காண்கிறது” என்றார்.

மங்கையின் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஒடியது. அதை மறைத்துக் கொள்வதுபோல் பாவனை செய்து, ஷாவை நேர்க்கி, “சரி, அது இருக்கட்டும்; என் வயது இன்னது என்று திட்டமாகக் கூறமுடியுமா?” என்று மறுபடியும் கேட்டாள்.

ஷா சிறிதும் தயங்காமல், சரி, சரி 18, 19, 14 இம்மூன்று தொகைகளையும் கூட்டிப் பாருங்களம்மா 51 என்று பளிச்சென்று சொல்லிவிட்டார்.


தலைவலிக்கு மருந்து உண்டா?

ஷா நெடுநேரம் உட்கார்ந்தவாறு உழைக்கும் மூளை உழைப்பின் காரணமாக தீராத தலைவலி ஏற்பட்டது.