பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

83


விஞ்ஞானத் துறை எவ்வளவோ முன்னேறி இருந்தும் தலைவலிக்கு மருத்துவர்கள் தக்க மருந்தைக் கண்டுபிடிக்காததைக் குன்றகூறினார்.

வட துருவத்தைக் கண்டு வந்த நான் சென் என்பவரை ஷாவுக்கு அறிமுகப்படுத்தியபோது, ஷா அவரிடம், “தலைவலி தீர்க்கும் மருந்து ஏதேனும் தங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

“தெரியாது” என்றார் நான்சென்.

“கண்டுபிடிக்க முயற்சி ஏதேனும் செய்ததுண்டா?” என்றார் ஷா “இல்லை” என்றார் அவர்.

“உங்கள் வாழ்நாள் முழுதும் வட துருவத்தைக் கண்டுபிடிக்கக் கழித்திருக்கிறீர்கள். உலகில் வாழும் மக்கள் எவரும் வட துருவத்தைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால் எல்லோரும் அழுது கூக்குரலிட்டு ஆவலோடு எதிர்பார்க்கும் தலைவலி மருந்தை நீங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்யாதது விந்தையே” என்றார் ஷா.


உயிருக்கு உயர்வு

உலகில் உள்ள எல்லாவற்றிலும் உயர்ந்த மதிப்புடையது உயிரே! அதை வீணடிப்பதே குற்றங்களில் கொடிய குற்றமாகும். சிறை வாழ்க்கையானது குற்றவாளியின்