பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


உயிரைப் போக்காமல் இருக்கலாம். ஆனால், மிகக் கொடுமையான முறையில் அந்த உயிரைக் கெடுத்து வீணாக்கி விடுகிறது.


கோழைத்தனம்

“பழக்க வழக்கங்களை தெய்வீகம் என மதிக்காதவர்களை பொல்லாதவர்கள் என மற்றவர்கள் எண்ணத் தலைப்படுகிறார்கள். அவர்களுடைய இயல்பான கோழைத்தன்மையே அதற்குக் காரணமாகும்.

புதுமையான சிந்தனையாளர், பழக்க வழக்கங்களை மதிக்கவில்லை என்றால், மற்றவர்கள் சார்ந்திருக்கும் வாழ்க்கையின் அடிப்படையை மதிக்காமல் அமைதியைக் குலைக்கிறார் என்று கருதுகிறார்கள். தவிர, முன்பு இருந்த கடமைகளோடு சேர்ந்து, பல புதிய சுமைகளும் இவரால் சமுதாயத்தில் உண்டாகின்றன. மற்றவர்கள் அவருடைய போக்கைக் கண்டு அஞ்சுவதற்கு உண்மையான காரணம் இதுவே.”


ரப்பரின் உபயோகம்

ஷா இலங்கைக்குப் போயிருந்தபோது பத்திரிகை நிருபர் ஒருவர் “ரப்பரின் தன்மையைப் பற்றி தங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்.