பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

85


“ரப்பரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அரசியல் மேதாவிகளின் மனச்சாட்சிகளை அமைப்பதற்கு ரப்பர் பெரிதும் உபயோகமாகிறது என்பதை அறிவேன். அத்தகைய ரப்பரை நீங்களும் இங்கே பயிரிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்” என்று பதில் அளித்தார் ஷா.


மனச்சாட்சி உறுத்தல்

ஷாவின் தாய் இசையில் வல்லுநர் ஷா சில சமயங்களில் தவறான இசையைப் பாடியதைக் கேட்ட அவருடைய தாய் உடனே எழுந்து வெளியே போய், சிறிதுநேரம் அழுதுவிட்டுப் பிறகு ஆறுதலோடு திரும்பிவருவாராம்.

அதை அறிந்த ஷா தம்மை நொந்து கொண்டிருக்கிறார். மேலும்,

‘ஒரு கொலையைச் செய்திருந்தாலும்கூட, என் மனச்சாட்சி என்னை இவ்வளவு வருத்தியிருக்காது. தவறான இசையால் நான் உண்டாக்கிய துன்பத்தை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை’ என்கிறார் ஷா.


மன்னரை சிறையில் அடை

இந்தியாவில், விடுதலைக் கிளர்ச்சி தீவிரமாக இருந்த போது, பிரிட்டிஷ் ஆட்சியாளர், காந்தியடிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.