பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


அப்பொழுது ஷா, “மகாத்மா காந்தியைச் சிறையில் அடைத்த குற்றத்துக்காக ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சிறையில் அடைக்க வேண்டும்” என்று மிகச் துணிச்சலாக எழுதினார்.


இனி அழிவுதான்

ஒரு சமயம், உலக நாடுகளிடையே அணுகுண்டு ஆபத்து மிகத்தீவிரப் பிரச்சினையாக எழுந்தது. அதைப்பற்றி,

“நாகரிக உலகம் விஞ்ஞானத்தோடு குரங்காட்டம் தொடங்கிவிட்ட்து. இனி அழிவுதான்” என்று எச்சரித்தார் ஷா.


மனித ஆயுள்

“மனிதனுடைய ஆயுள் மிகவும் குறைவாயிருப்பதால், மனித வாழ்வு உபயோகம் இல்லாமல் போய்விடுகிறது. மனிதன் தேவ ஜீவனம் பெற வேண்டுமானால், குறைந்த பட்சம் மனிதனுக்கு ஆயுள் முந்நூறு ஆண்டுகளாவது இருக்க வேண்டும்” என்று ஒரு நாடகத்தில் கூறுகிறார் ஷா.


தற்பெருமை

“அவ்வப்போது, என் எழுத்துக்களிலிருந்தே நான் மேற்கோள் காட்டுவது வழக்கம். ஏனெனில் அவை என் எழுத்துக்களுக்கு மிகுந்த சுவையூட்டுகின்றன.