பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

87


(தம் எழுத்துக்களைத் தாமே பாராட்டிக்கொள்ளும் வழக்கம் ஷாவிடம் காண முடியும்).


விருந்துக்கு மறுப்பு

பிரபலமான ஒரு சங்கத்திலிருந்து விருந்துக்கு வருமாறு ஷாவுக்கு அழைப்பு வந்தது.

“ஒருவர் மற்றொருவருடன் கலந்து பழகுவதைச் சகித்துக் கொண்டிருப்பதற்காகக் குடித்து, மயங்கவேண்டிய நிலையில் இருக்கும் பணக்காரர்களுடன் ஒரு பிற்பகலைக் கழிக்க நான் விரும்பவில்லை. இந்த உலகில் எதுவும் அத்தகைய நிலைக்கு என்னைத் தூண்டிவிடவும் முடியாது” என்று எழுதி, அந்த விருந்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார்.


இரண்டு மேதாவிகள்

முன்னர் ஒரு சமயம், இத்தாலியின் தலைநகரான ரோமாபுரியில் அர்ச் பவுள் தேவாலயத்தை பெர்னார்ட் ஷாவுக்கும், பிரான்சின் பிரபல எழுத்தாளர் அனதோல் பிரான்சுக்கும் காட்டி விளக்கிக் கூறினார்கள்.

இந்த இரண்டு எழுத்தாளர்களும் கிண்டலாகப் பேசுவதில் வல்லவர்கள். ஆனால், அவர்கள் இருவருக்கும் அறிமுகம் இல்லை.