பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

7


”பார்லிமெண்டுக்குள் இருக்கும் நூறு உறுப்பினர்களை விட, வெளியேயிருக்கும் ஒரு ஷா அதிக சக்தி வாய்ந்தவன்” என்று கூறி தேர்தலுக்கு நிற்க மறுத்துவிட்டார் அவர்.

தன் பலத்தையும், செல்வாக்கையும் நன்கு உணர்ந்திருக்கிறார் ஷா.

பயனுள்ள பிரசாரம்

காந்தியடிகளின் புதல்வர் தேவதாஸ் காந்தி மேல்நாடு சென்றிருந்தபோது ஷாவைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். மதுவிலக்கு பற்றிய கேள்விக்கு “உங்கள் நாட்டில், மதுவிலக்கு சம்பந்தமாகப் பலத்த பிரசாரம் செய்வதைவிட மக்களிடம் சென்று உங்கள் ஷா மதுவைக் கையாலும் தொடுவது இல்லை என்று கூறுங்கள். அதன் விளைவு உங்கள் பிரசாரத்தைவிடப் பன்மடங்கு அதிகப்பயன் உள்ளதாக இருக்கும்” என்றார் ஷா.

ஷாவின் பதில் தற்பெருமையை தன்னம்பிக்கையைப் பறைசாற்றுவதாக இருக்கிறது.

திருமண அன்பளிப்பு

நண்பர் ஒருவருடைய திருமணத்துக்கு அழைப்பு வந்தது ஷாவுக்கு.