பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


இந்த இருவருக்கும் ஒரு சிலையைச் சுட்டிக்காட்டி, "இதுதான் கான்ஸ்டண்டைனுடைய உருவச் சிலை, கிறிஸ்துவ சமூகத்தை முதன் முதலில் தழுவிய அரசர் இவர்தான்” என்றார் வழிகாட்டி.

உடனே, அனதோல் பிரான்ஸ், ஆச்சரியத்தோடு, "கிறிஸ்துவ மதத்தைக் கைவிட்டுவிட்ட கான்ஸ்டண்டைனா” என்றார்.

அப்பொழுது, அங்கே நின்ற கூட்டத்தில் ஷா ஒருவர் தான் அனதோல் பிரான்ஸின் சொற்களை மிகவும் ரசித்தவர்.

அதன்பின், அனதோல் பிரான்ஸ் அதை அறிந்துதாமே ஷாவிடம் அறிமுகம் செய்துகொண்டு, “ஐயா! நீங்களும் நம்மைச் சேர்ந்த ஆள்தான்” என்றார் ஷா.

ஆம்; நானும் கூட ஒரு மேதாவிதான்” என்றார் ஷா.


அவர் ஒரு கம்யூனிஸ்ட்

“நீங்கள் எந்தக் கட்சி” என்று ஷாவிடம் ஜேம்ஸ் பிரிடி என்பவர் கேட்டார்.

“நான் கம்யூனிஸ்ட்!” என்று பதில் அளித்தார் ஷா.


எனக்குப் பங்கு இல்லை

ஷா மது அருந்துவது இல்லை என்பது உலகறிந்த விஷயம்.