பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

91


மையை அழிப்பது எப்படி?

“கொடுமை இல்லாமலே தீமையை அழிப்பதற்கு நகைச்சுவையால்தான் முடியும்; இகழ்ந்து கூறாமல் நல்ல இணைக்கத்தை உறுதிப்படுத்தவும் அதனால்தான் முடியும்” என்பது ஷாவின் கொள்கை.


அவர் வேறு; இவர் வேறு

ஷா இளமையில் எழுதிய ஒரு நாவலைப் பற்றிக் குறிப்பிட்டபோது அந்த நாவலைதாம் எழுதியதாகக்கூறர்மல், “அந்த ஷா 1880-ல் இருந்தவர்; அவர் வேறு இப்போது உள்ள ஷா வேறு” என்று எழுதிவிட்டு - “எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உடலில் உள்ள எல்லாம் மாறி, உடலே புதிதாக அமைகிறது எட்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த அணுக்கள் பின்னர் உடலில் இருப்பதில்லை” என்று உடல் நூலார் கூறுவதை எடுத்துக்காட்டி- “இந்த நாவல் எழுதிய ஷா 1888-ல் இறந்துவிட்டார். அதற்குப்பிறகு, பல ஆசிரியர்கள் அந்த ஷாவைத் தொடர்ந்து இறந்திருக் கின்றார்கள். ஆகையால் இந்த நாவல் எழுதியவர் என்னுடைய முப்பாட்டன் என்று சொல்ல வேண்டும். அவர் எழுதிய நாவலில் நான் ஆர்வம் கொள்ள முடியாது. அந்த ஷாவைப்பற்றி என் நினைவும் மங்கிவிட்டது; இருக்கின்ற நினைவும்கூட எத்தனையோ பொய்கள் கலந்து மாறுபாடாக இருக்கிறது. ஆகையால், அந்த ஷாவைப்பற்றி எனக்குத் தெளிவாகவும்