பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


முழுமையாகவும் தெரியாது” என்று எழுதி, உண்மை தோன்றச் செய்தார்.


நீதி புகட்டுதல்

இத்தாலி தேசத்தின் மகாகவி தாந்தேயின் நூலின் ஓர் இடத்தில் ஷா.

“காதல் சம்பந்தமாக அல்லாமல், வேறு வகையில் முட்டாள்கள்தான் நட்பு வைத்துக் கொண்டிருப்பார்கள், நாம் வெறுப்பவர்களுக்கும் கூட நீதி புகட்டுவதையே நான் வற்புறுத்துகிறேன்” என்று குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்.


எதிர்பார்த்ததே!

நாடக நடிகர் ஒருவருடைய நடிப்பில் சில குற்றங்களைக் கண்டார் ஷா. அதைக் குறிப்பிட்டு அவர் எழுதிய கடிதம்:

“பிறருடைய தொழிலில் நான் ஏன் இவ்வாறு தலையிடுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம். ஒரு நாடக ஆசிரியர், இவ்வாறு பிறர் வாழ்வில் தலையிடுவதைப் பற்றிக் கேட்கக் கூடாது. ஏனென்றால், பிறருடைய வாழ்வில் தலையிட்டுக் குற்றம் காண்பதுதான் நாடக ஆசிரியரின் கடமை. பிறருடைய வாழ்வுதானே நாடகத்தில் நடித்துக் காட்டப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார் ஷா.

கடிதத்தைக் கண்ட அந்த நடிகர், ஆத்திரத்தோடு ஷாவைக் கண்டித்து தன் உணர்ச்சிகளைக் கொட்டி எழுதினார்.