பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


உணர்ந்தேன். என் முகத்திலுள்ள கண்ணைப்போலவே, என் மனக்கண்ணும் (கற்பனைக்கண்) அளவான நிலையில் இருக்கிறது. பெரும் பாலானவர்களுக்கு மனக்கண்ணும் கெட்டுப் போயிருக்கிறது. அதனால்தான், உலகத்தை கண்டு தான் அறியும் முறை அவர்களுக்குப் பிடிக்கவில்லை” என்று கூறுகிறார் ஷா.


திரும்பிக் கொள்வார்

நாடக கலைஞர் இர்விங் இறந்துவிட்டார். அவரது உடலை அடக்கம் செய்த சடங்கில் கலந்துகொள்ள் வருமாறு ஷாவுக்கு அழைப்பு வந்தது.

“எனக்கு அனுப்பிய அழைப்பை திருப்பி அனுப்புகிறேன். இலக்கியத்துக்கு இர்விங் வாழ்வோடு தொடர்பு இல்லாததைப் போலவே, அவருடைய இறப்போடும் எனக்குத் தொடர்பு இல்லை.

“இர்விங் வந்தால், ஷேக்ஸ்பியர் தன் சவப்பெட்டியில் திரும்பிக் கொள்வார். அதைப் போலவே, நான் வந்தால் இர்விங்கும் சவப்பெட்டியில் திரும்பிக்கொள்வார்.” என்று எழுதினார் ஷா.

(இர்விங்கைப் பிடிக்காமல் முன்னர் தாக்கி எழுதியவர் ஷா).