பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

95


அறுவை நிகழ்ச்சி

வயலின் இசைநிகழ்ச்சி ஒன்றுக்குப் போயிருந்தார் ஷா. சிறிது நேரம் இருந்தார். வித்துவானின் இசை நிகழ்ச்சியை ஷா ரசிக்கவில்லை.

“வயலின் வித்துவானைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார், நிகழ்ச்சி அமைப்பாளர்.

“இவருடைய இசையைக் கேட்டபோது, ரூஸ்கியின் நினைவுதான் எனக்கு உண்டாகிறது” என்றார் ஷா.

நிகழ்ச்சி அமைப்பாளர் திடுக்கிட்டு, ரூஸ்கி வயலின் வித்துவான் அல்லவே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று வியப்போடு கேட்டார்.

உடனே ஷா, “இவர் மட்டும் என்னவாம்?” என்று பதில் அளித்தார்.


தகுதி பெறாத மக்கள்

பொழுது போக்காக நடைபெறும் விளையாட்டுக்களை ஷா எப்பொழுதும் வெறுத்து வந்தார். “நான் நன்கு சிந்தித்தப் பிறகு இந்த முடிவுக்கு வந்தேன். வெட்ட வெளியான இடத்தில், ஒரு பந்தைக் துரத்திக்கொண்டு திரிவதைத் தவிர, வேறு எதற்கும் இக்காலத்து மக்கள் தகுதி அடையவில்லை என்பதை அறிந்தேன்” என்று கூறுகிறார் ஷா.