பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

திட்டப்படி அமைகின்றன என்பது அவர் கண்ட முக்கியமான உண்மை. அவருக்குப் பின் எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பாரம்பரியத் தன்மைகளைப் பற்றிச் சோதனைகள் செய்திருக்கிறார்கள். ஒருவர் காரெலிகளையும் வெள்ளெலிகளையும் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்தார். காரெலிக்கும் வெள்ளெலிக்கும் பிறந்த குட்டிகள் கருமை நிறமாகவே இருந்தன. ஆனால் அவை பருவமடைந்து, தமக்குள்ளேயே இனவிருத்தி செய்தபோது, காரெலிகளும் வெள்ளெலிகளும் அடுத்த பக்கத்தில் உள்ள படத்தில் கண்டவாறு தோன்றின.


3. அணுக்கள்

உயிருள்ள ஒவ்வொரு பொருளும் அணுக்களால் (cells) ஆக்கப்பட்டிருக்கிறது. மரம் செடி கொடிகளையும் பிராணிகளையும் போலவே மனிதனும் இந்த அணுக்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறான். முதலில் ஓர் அணு இருக்கிறது. அது இரண்டாகப் பிரிந்து இரண்டு அணுக்கள் ஆகிறது. அவை மறுபடியும் பிரிகின்றன. இவ்வாறு அணுக்கள் தாமே பிரிந்து பிரிந்து பெருகுகின்றன. அவற்றின் தொகுதியாகவும், அவற்றால் உண்டாக்கப்பட்ட எலும்பு போன்ற பாகங்களாலும் உயிர்ப் பொருள்கள் உருவாகின்றன. அணு மிக நுட்பமான பொருள். ஒவ்வோர் அணுவும் உயிர்