பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

பரியத் தன்மையையே கொண்டிருக்கும், மேல் தோலின் அடிப்பாகத்திலுள்ள சில அணுக்களில், நிறத்திற்குரிய வஸ்து சேர்ந்திருப்பதாலேயே இந்த நிறம் ஏற்படுகிறது. இதுபோலவே தலை மயிர், எலும்பு முதலியன அமைவதும் அணுக்களைப் பொறுத்தே இருக்கிறது. தேகத்திலுள்ள உறுப்புக்களை உருவாக்குவதில் சுரப்பிகளும் உதவி செய்கின்றன. நமது உடம்பிலே பலவேறு பாகங்களில் பலவகையான சுரப்பிகள் இருக்கின்றன. பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland) என்பது மூளையின் அடிப்பாகத்தில் இருக்கிறது. அது உடல்வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது. இந்தச் சுரப்பி சரியானபடி வேலை செய்யாவிடில் மனிதனுடைய உயரம் குறைந்துவிடுமாம். இந்த மாதிரி பல சுரப்பிகள் உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன; மனிதனுடைய தன்மை, திறமைகளுக்கும் காரணமாகின்றன. என்றாலும், அவைகளெல்லாம் அணுக்களாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சுரப்பிகள் நன்கு வேலை செய்வதும் அந்த அணுக்களைப் பொறுத்தே இருக்கிறது.

உடம்பிலுள்ள அணுக்களெல்லாம் ஓர் அணுவிலிருந்து பிரிந்து உண்டானவை. அந்த முதல் அணுவையே பூரித்த அண்டம் அல்லது கருமூலம் (Fertilised Egg) என்று சொல்வார்கள்.