பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

யின் நிறக்கோல்களில் நிறத்துக்குக் காரணமாக ஒரு ஜீன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த ஜீனின் முக்கியத் தன்மை என்னவென்றால், அது ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிறக்கோலில் ஒரு குறிப்பிட்ட பாகத்தில்தான் அமைந்திருக்கும். கலப்பினச் சேர்க்கை ஏற்படும்போது நிறத்துக்கு ஏதுவான ஜீன் என்னவாகிறது என்று இப்போது கவனிப்போம்.

முதலில் கலப்பில்லாத ஒரு சுயமான வெள்ளைப் பூப் பூக்கும் அந்தி மல்லிகையை எடுத்துக் கொள்வோம். அதன் உயிரணுவிலே பல நிறக்கோல்கள் இருக்குமல்லவா? அவற்றை யெல்லாம் உருவத்தில் ஒத்திருக்கும்படியான ஜோடிகளாகப் பிரித்து வைக்கலாம் என்பதும் நமக்குத் தெரியும். அப்படி வைத்தால் ஒத்த ஜோடிகளிலே உள்ள இரு நிறக்கோல்களில் ஒன்று ஆண் தன்மையிலிருந்தும் மற்றொன்று பெண் தன்மையிலிருந்தும் கிடைத்தவையாகும். ஒவ்வொரு ஜோடியிலும் ஒரே மாதிரியான தன்மைக்குக் காரணமான ஜீன்கள் இருக்கின்றன. அதாவது, ஒரு ஜோடியிலுள்ள இரண்டு நிறக்கோல்களிலும் ஒரே தன்மைக்குக் காரணமான ஜீன்கள் ஒரே அளவில் இருக்கும். நிறத்துக்குக் காரணமாக ஒன்றில் ஒரு ஜீன் இருந்தால் மற்றொன்றிலும் ஒரு ஜீன் இருக்கும். ஆதலால் இந்தச் சுயமான வெள்ளை அந்தி மல்லிகையில், நிறத்துக்குக் காரணமான ஜீன்கள் ஏதாவது குறிப்பிட்ட