பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

யில் நிறத்துக்கான ஜீன்கள் ஒரே அளவான சக்தியைப் பெற்றிருக்கின்றன. வெவ்வேறு நிறமுள்ள இரு ஜீன்கள் வந்து சேரும்போது அவை இரண்டின் அம்சங்களும் புதிய பூவில் சமமாக வெளிப்படுகின்றன. ஆனால் எலிகளின் விஷயத்தில் அவ்வாறு ஏற்படுவதில்லை. எலியிலே கருமை நிறம் ஓங்கி (Dominant) நிற்கிறது. அது வெண்மை நிறத்தை மறைத்துவிடும் சக்தி

படம் 4.

வாய்ந்ததாகக் காண்கிறது. அதனால்தான் கலப்பினச் சேர்க்கையில் காரெலிகளே தோன்றுகின்றன. காரெலியில் நிறத்துக்குரிய நிறக்கோல்களைக் கக என்று குறிப்பிடுவோம். அதேபோல வெள்ளெலியில் உள்ளவற்றை வெவெ என்று குறிப்பிடுவோம்.

கலப்பினச் சேர்க்கையால் உண்டான எலியின் நிறக்கோல்களில் கருமை, வெண்மை ஆகிய இரண்டுக்கும் உரிய ஜீன்கள் இருந்தாலும் (5-வது படம்)