பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

 திருக்க முடியாது. நாகரிகம் வாய்ந்த சமூகத்தில் பிறந்ததால் நியூட்டனுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களும் அநுபவங்களும் பயிற்சிகளும், அநாகரிகமான பழங்குடி மக்களிடையே தோன்றியிருந்தால் அவனுக்குக் கிடைத்திரா. அவனுடைய பெருமையெல்லாம் முடிவாகச் சூழ்நிலையினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

சூழ்நிலை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அதி முக்கியமானது. அதனால் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. சீதோஷ்ண நிலைமைகூட நம்மைப் பாதிக்கிறது. சாதாரணமாக ஈக்களுக்கு மூன்று ஜோடி கால்களே உண்டு. ஆனால் அவற்றை மிகக் குளிர்ந்த பிரதேசத்தில் வளர்த்தால் அவற்றுக்கு ஆறு ஜோடி கால்கள் உண்டாகின்றன. ஹிமாலய முயல்க ள் வெண்மையான ரோமமுடையவை. ஆனால் அவற்றை மிகக் குளிரான பிரதேசத்தில் வளர்த்தால் உரோமம் கறுப்பாக மாறிவிடுகிறது.

மனிதனைப் பொறுத்த வரையில் இன்னுமொரு முக்கிய விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கருமை நிறத்துக்குள்ள ஜீனே ஒரு பூரித்த அண்டத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது குழந்தையின் நிறம் கருமையாகவே இருக்கும். இதை மாற்ற முடியாது. ஆனால் ஒருவன் கணக்கிலே மிகுந்த திறமைக்குக் காரணமான ஜீனைப் பெற்றிருப்பதாகக் கொள்வோம். அதிலிருந்து அவன் பெரிய கணித