பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7



2. அந்தி மல்லிகையும் எலியும்

பல ஆண்டுகளுக்கு முன்பு மெண்டல் (1822-1884) என்னும் பாதிரியார் ஐரோப்பாவில் பிரன் என்ற இடத்திலுள்ள மடத்தில் இருந்து கொண்டு தாவரங்களிலே வேறினச் சேர்க்கையால் ஏற்படும் பலன்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். எட்டு வருஷங்கள் அவர் பல சோதனைகள் செய்து பாரம்பரியத் தன்மைகள் ஓர் ஒழுங்கான முறையில் அமைகின்றன என்று கண்டுபிடித்தார். அவருக்குப்பின் பலர் இதே துறையில் ஆராய்ச்சிகள் நடத்தி அவர் கூறுவது சரியென்று கண்டிருக்கிறார்கள்.

அந்தி மல்லிகையில் சிவப்பு நிறமாகப் பூக்கும் ஓர் இனமும் வெள்ளை நிறமாகப் பூக்கும் ஓர் இனமும் இருக்கின்றன. மெண்டல் அவற்றை எடுத்துக்கொண்டார். அந்த இரண்டு இனங்களையும் சேர்த்தால் என்ன ஆகிறது என்று அவர் சோதனை செய்யலானர்.

பூவிலே மகரந்தத் துாள் இருக்கிறது. அந்தத் துாளிலே ஆண் தன்மை உடையதும், பெண் தன்மை உடையதும் உண்டு. அவை இரண்டும் சேரும் போது பூ காயாக மாறுகிறது. ஒரு பூவிலேயே இரண்டு தன்மைகளையுடைய மகரந்தமும் இருப்பதுண்டு. அவை கலப்பதற்குத் தேனிக்கள் ஒரு காரணமாக இருக்கின்றன. தேனியின் வேலையை மெண்டல் தாமே மேற்-