பக்கம்:பேசாத நாள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ʻ öö பேசாத காள்

உள்ளத்தே இறைவனுடைய திருவுருவத்தை, சலன. மின்றி கிரந்தரமாகக் கிழியில் எழுதிய சித்திரத்தைப் போலப் பார்க்கிறவர்களுக்கு, உலக வாசனேயே இராது. புறக் காட்சி சிறிதும் இராது. புறக் காட்சி உள்ளவர் களுக்கு அகக் காட்சி இல்லை. அகத்தே இந்த ஒவியத்தை உற்று கோக்குபவர்களுக்குத் தமக்கென்று ஒரு செயல் இல்லை. எல்லாவற்றையும் இறைவனிடத்தே அர்ப்பணம் செய்து இன்புறும் கிலே அது. 'யான் தான் எனும் சொல் இரண்டு அங்கே இல்லை. ஆத்ம சமர்ப்பணம் செய்துவிட்டு கிற்கும் அந்த கிலேயை அப்பர் சுவாமிகள் மேலே சொல்கிரு.ர்.

உயிரா வனம்இருந்து உற்று நோக்கி

உள்ளக் கிழியின் உரு எழுதி,

உயிர்ஆ வணம்செய்திட்டு உன்கைத் தந்தால் உணரப் படுவாே ரா ட்ொட்டி வாழ்தி.

உள்ளக் கிழியில் உரு எழுதிய பிறகு அந்த உருவத் தையே கோக்கி உண்முகமானவர்கள் தம்முடைய உயிரையே விலக்கு விற்றுவிடுகிருர்களாம். ஆவணம் என்பது ஒலே. ஒலே எழுதிக்கொடுத்து விற்றுவிடுவதை ஆவணம் செய்தல் என்று குறிக்கிருர். அப்படி முறி யெழுதித் தம்மையே இறைவன் கையில் கொடுத்துவிட்டுத் தம்மை இழ்ந்து கிற்கிறவர்கள் யாரோ அவர்க்ளே மெய்ஞ் ஞான நிலை பெற்றவர்கள்: உணர்வு உடையவர்கள்: உணர்பவர்கள். அத்தகையவர்களோடு இறைவனும் பிரி வின்றி ஒன்றி ஒட்டி வாழ்வான். -

பணத்தாலும் பலத்தாலும் சிறந்தவர்கள் இறை வைேடு ஒட்டி வாழும் வாழ்வை மனத்தாலும் வினேக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/56&oldid=610114" இலிருந்து மீள்விக்கப்பட்டது