பக்கம்:பேசாத பேச்சு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரக்கர் கோபம்

விசுவாமித்திர முனிவர் தம்முடைய வேள்வியை அரக்கர் இயற்றும் இடையூற்றினின்றும் காக்கும் பொருட்டு ராமனேயும் லக்ஷ்மணனேயும் அழைத்துச் சென் ருர். இடைவழியிற் காணும் இடங்களையும் அவற்ருேடு தொடர்புடைய வரலாறுகளேயும் முனிவர் ராமனுக்குச் சொல்லிக்கொண்டே சென்ருர். அப்போது ஒரு பாலை 'நிலத்தை அவர்கள் அணுகினர். இந்தப் பூமி சிவபிரா னது நெற்றிக்கண் பட்டு வெந்துதான் போயிற்ருே? வேறு தான் உண்டோ?” என்று ராமன் கேட்க, விசுவாமித்திார் தாடகை என்னும் அாக்கி அங்கிருந்த உயிரையெல்லாம் வயிற்றில் இட்டர்ளென்றும், அவள் செய்த கொடுமையி ல்ை உயிரற்முெழித்த பாலையாயிற்று அங்கிலப் பகுதி என்றும் சொல்லி, அவ் வாக்கியின் வரலாற்றையும், அவளே தம் வேள்வியை கலிபவளென்ற செய்தியையும் எடுத்துரைத்தார். - * கேட்ட ராமன், "எங்கு உறைவது இத்தொழில் இயற்றுபவள்?’ என்று வினவவே, "இதோ இவ்விடக் தில் அவள்...” என்று முனிவர் விடைகூறி முடிப்பதற்கு முன்பே அவர்களுக்கு முன்பு தாடகை, மைவரை கெருப்பு எரிய வந்ததென வந்தாள். -

அவள் பெரிய உடம்போடும் அதற்கேற்ற சாட்சச ஆபரணங்களோடும் வருகிருள். காலிலே பூண்ட அணியில் சலங்கைகள் இருக்கின்றன. பொன்னுலும் மணியாலும் செய்தவை அல்ல. அவை மனிதப் பூச்சிகளின் ஆபாணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/102&oldid=610257" இலிருந்து மீள்விக்கப்பட்டது