பக்கம்:பேசாத பேச்சு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*94 பேசாத பேச்சு

அல்லவா! மலைகளைக் கோத்து அணிந்த கழலுடையவள் அவள். இயற்கையாகவே கோபத்தைக் குணமெனக் கொண்ட அாக்கிக்கு மானிட வாசனை வீசிய மாத்திரத்தில், அது கொழுந்துவிடத் தொடங்கியது. காலைப் பூமியிலே இங்கி மிதித்தாள். மலைகளெல்லாம் பூமிக்குள்ள்ே அழுந்தி விட்டன. அதனுல் நிலம் குழித்தது. அப்போது பூமியும் நடுங்கியது. அந்த நடுக்கத்தினுல் எங்கேயோ இருந்த சமுத்திாம் நிலகலங்க, அதன் நீர் கரை புரண்டு வந்து அவள் மிதித்ததனுல் உண்டாகிய குழியிலே புகுந்தது. உலகத்தில் உள்ள உயிர்களைக் குறிப்பிட்ட காலத்தில் கொல்பவன் கூற்றுவன். அவளோ தன்னுடைய உல்லாசக் தின் பொருட்டு எந்தச் சமயத்திலும் பல்லாயிர உயிர்களே ஒருங்கு மடியச் செய்வாள். அவள் கோபம் கொண்டாள் என்ருல் கூற்றுவனுக்குப் பல காலம் வேலையில்லாமற் செய்துவிடுவாள். பிறருக்கெல்லாம் யமனுக நிற்கும் அவன், தனக்கு இவள் யமனுகிவிட்டால் என்செய்வது என்று அஞ்சி ஒடிப் பாதாளத்தில் புகுந்துகொள்கிருன். அவள் வரும் வேகத்தில் மலைகள் இடம் பெயர்ந்து அவள் பின் வருகின்றன. -

அழிக்கும் ஆற்றலேயே உருவு செய்தாற்போன்றவள் தாடகை அணுக்குண்டின் அம்சமென்று வைத்துக் கொள்ளலாமே. அந்த அணுக் குண்டைக் கோப மென்னும் விசையால் முடுக்கியாயிற்று. அது இயங்கத் தொடங்கியது. கிலத்தையும் கடலையும் மலைகளையும் முறை பிறழச் செய்துவிடுகின்றது அந்தக் கோபம், அாக்கர் அறத்துக்கு மாறுபட்டவர்கள். இயற்கையை மாற்றுபவர் கள். இயற்கை கியதியைப் போக்கி வேறு வேருக்கிப் பிரித்துப் பல உயிர்களுக்கு எதம் வின்விப்பவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/103&oldid=610258" இலிருந்து மீள்விக்கப்பட்டது