பக்கம்:பேசாத பேச்சு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. பேசாத பேச்சு

உலகம் எழும் நடுங்கச் சப்தித்தாள். இடி இடிப்பது போலக் குமுறினுள். தன் கண்ணிலிருந்து எழுந்த கோபக் கனலால் மேகங்களெல்லாம் கருகித் துண்டு துண்டாகக் கீழே விழும்படியாக விழித்துப் பார்த்தாள். உள்ளம் புழுங்கிப் பெரிய மலைகளெல்லாம் நடு நடுங்கிக் குழைந்து விழ உதைத்தாள். சக்திானே வெட்டி வைத்தாற்போன்ற பல்லக் கடித்தாள். கையிலே உள்ள சூலத்தைப் பற்றி எறிய முற்பட்டாள். * . -

மேகமவை இற்றுக விழித்தனள் புழுங்கா மாகவரை அற்றுக உதைத்தனள் மதித்திண். பாக்மென முற்றெயி றதுக்கியயில் பற்ரு . ஆகமுற உய்த்தெறிவன் என்றெதிர் அழன்ருள். [மாகவரை-வான அளாவிய மல. எயிறு. அதுக்கிபல்லேக் கடித்து. அயில்-குலம். ஆகம் உற-உடம்பிலே தைக்க உய்த்து-வீசி. - * - :

தாடகையின் கோபம், அவளுடைய மிருக பலம் அத்தனையும் முழு ஆற்றலோடும் சேர்ந்து தொழிற்படச் செய்கின்றது; அதன் மூலம் விளக்க விளைவு இயற்கையை மாற்றுகிறது; மேட்டைப் பள்ளமாக்குகிறது; பள்ளத்தை மேடாக்குகிறது; நீரைக் குடித்து நெருப்பை வளர்க்கிறது; இதுதான் ராட்சச்க் தன்மை, * ... . . . . . . .

முக்கறுபட்ட சூர்ப்பணகை இலங்கையை அடைந்து ாாவணன் முன்போய் விழுந்து புரண்டாள். அவள் மூக் கில்லா முகம் ராவணன் கண்ணில் பட்டது. அவ இவக்குக் கோபம் வந்ததென்று கம்பர் சொல்லவில்லை. ஆனல் அந்தக் கோபக்கனல் எழுமுன் சூழ்நிலை எப்படி இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/105&oldid=610260" இலிருந்து மீள்விக்கப்பட்டது