பக்கம்:பேசாத பேச்சு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியர் கோபம் 103

எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கிறது இப்போது.

கண்ணில்கடைத் தீயுக நெற்றியிற் கற்றைநாற விண்ணிற் சுடருஞ் சுடர்தோன்ற மெய்ந்நிர்விரிப்ப உண்ணிற்கும் உயிர்ப்பெனும் ஊதை பிறங்கநின்ற அண்ணற்பெரி யோன் தனது ஆதியின் மூர்த்திஒத்தான் (கடைத்தி - பிரளய கால அக்கினி. கற்றை. குழற் கற்றை. சுடர் - பிரகாசம். உயிர்ப்பு - பெருமூச்சு, ஊதை பிரசண்ட மாருதம், அண்ணல் - தலைமை. ஆதியின் மூர்த்தி . மூலமூர்த்தியாகிய ஆதிசேஷன்).

அவன் கொஞ்சம் பேசுகிருன். பிறகு யுத்த சந்தத் தனக நிற்கிருன். வாளேச் செருகி, வில்லைத் தாங்கி, அம்புப் புட்டிலே முதுகிலே கட்டிக்கொண்டு கவசத்தையும் அணி கின் முன். கழல் ஆர்க்கின்றன. வில்லின் நானே ஒலிக் கிருன். பிறகு, "இந்த உலகத்தையே சுட்டுக் கொட்டை பாப்புகின்றேன்” என்று கர்ஜிக்கிருன். -

கோபம் பேச்சாக வந்தால் அதற்கு ஆற்றல் குறைவு. - முன்னே பார்த்த கோபங்களில் பேச்சு மிகவும் குறைவு. பாவமாகிய பேசாத பேச்சே அதிகம். இங்கே லட்சுமண னிடம் தோற்றும் மெய்ப்பாடுகள் உலகத்தைப் பய முறுத்தவில்லை. அவன் உடம்பளவில் தோற்றுகின்றன. கோபத்தின் விளைவு அவன் ஆயுதங்களேத் தரிப்பதோடு கிற்கின்றது. அந்தக் கோபம் அறிவுடையோன் கோபம் ஆதலின் ஆறக்கூடியது. ஆலுைம் தானே ஆறுவதன்று; பிறர் வந்து அவிக்க வேண்டும். -

லட்சுமணன் கோபக் கனலே அவிக்க ஒரு கரிய மேதம் அளியை வீசி வருவது போலச் சொல்லாகிய, மாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/112&oldid=610267" இலிருந்து மீள்விக்கப்பட்டது