பக்கம்:பேசாத பேச்சு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பேசாத் பேச்சு

வழங்க, அஞ்சன வண்ணகிைய ம ன் வந்து விட்டான். -

அவன் கிருமார்பிலுள்ள ஆபரணங்கள் மேகத்தில் மின்னல் மின்னுவதுபோல மின்னுகின்றன. ஆருத கனலை யும் ஆற்றும் வன்மை பெற்ற நீருண்டு கருமை பெற்ற மேகத்தைப் போல ராமன் வருகின்ருன்.

விறுஆக்கிய பொற்கலன் வில்லிட ஆரம் மின்ன மாருத்தனிச் சொற்றுளி மாரி வழங்க வந்தான் கால்தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் ஆருக்கனல் ஆற்றுமொர் அஞ்சன மேகம் என்ன. (விறு-தனிப் பெருமை. வில்லிடஒளிவிட சொல்லா கிய துளியையுடைய மழை. கால் தாக்க-காற்று வீச அஞ் சனம்-மையின் நிறம் பெற்ற,) -

அந்த மேகம் லட்சுமணன் உள்ளக் கொதிப்பு அடங் கத் தக்க சொன்மாரியைப் பெய்கின்றது. அதனல் ஆமுக் கனல் அவிகின்றது. கொந்தளிப்புடைய கடல் அடங்கினற் போல லட்சுமணன் சீற்றம் துறக்கிருன்.

தவ முனிப்ாலுைம் சரி, அரக்கைைலும் சரி, எதிர் கின்று கூறுவார் கூற்று அவருடைய கோபக் கனலுக்கு விறகாக உதவுமேயன்றி அவிக்காது. இங்கே கோபத்தைக் காட்டிலும் அன்பும் அறிவும் விஞ்சி நிற்கின்றன. அதனல் கோபம் எழுகின்றது; பின்பு ஆறுகின்றது.

இதோ பாதன் கோபம் கொள்கிருன். லட்சுமணன் கோபத்துக்கும் பாதன் கோபத்துக்கும் வேற்றுமை உண்டு. லட்சுமணன் முன்கோபி. பாகன் கோபமே கொள்ளாதவன்; குணம் என்னும் குன்று ஏறி நின்றவன். அவனிடம் வெகுளி கண கோந்தான் கிற்கும். ஆனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/113&oldid=610268" இலிருந்து மீள்விக்கப்பட்டது