பக்கம்:பேசாத பேச்சு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிநயங்கள்

நாடகத்தில் நடிப்பவர்களுக்கு ஆடல் பாடல் அழகு என்ற மூன்று இலக்கணங்கள் சிறந்திருக்க வேண் டும் என்று கூறுவர். ஒரு பாத்திரத்தின் நடிப்பில் ரஸம் தோன்றவேண்டுமானல் அந்த ாலத்திற்கு இசைந்த செய் லும் சொல்லும் அமையவேண்டும். காவியங்களில் அமைந் திருக்கும் குறிப்புக்களேவிட நாடகத்தில் உள்ள குறிப் புக்கள் கண்டோர் உள்ளத்தே நன்முகப் பதியும். அத ல்ைதான் அதைத் திருச்ய காவியம் என்று புலவர்

அங்.) இ! T.

நாடகத்தில் நடிப்பவர் தம் பேச்சாலும் பாவத்தாலும் சுவையை உண்டாக்குவர். அப்படி உண்டாக்கும் சுவைகள் ஒன்பது. அந்த அந்தச் சுவைகளுக்குப் பொதுவாகச் சில பாவங்கள் உண்டு. அவற்றை நாடக நூல் செய்தவர் கள் ஒரு வகையாக வரையறுத்திருக்கிருர்கள். இந்த வரையறை. பொதுவாக இருந்தாலும் பாத்திரங்களின் இயல்புக்கு ஏற்றபடி அவற்றின் விரிந்த பகுதிகளில் வேறுபாடு இருக்கும்.

சுவைகளே வெளிப்படுத்துவதற்கு ஏற்ற அபிநயங்களே நாடக இலக்கணம் சொல்கிறது. உடம்பினிடத்தே தோற். ம்ம் சத்துவங்களையும் பிற தோற்றங்களையும் கானும் போது, இவன் இன்ன மன இயல்பைப் புலப்படுத்து கிருன்’ என்று தோன்றும். .

விாச்சுவை யவிநயம், பயச்சுவை யவிநயம், இழிப்புச் சுவை யவிநயம், அற்புதச்சுவை யவிநயம், இன்பச்சுவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/125&oldid=610280" இலிருந்து மீள்விக்கப்பட்டது