பக்கம்:பேசாத பேச்சு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிங்யங்கள் - 117

யவிநயம், அவலச்சுவை யவிநயம், நகைச்சுவை யவிசயம், நடுவு நிலைச்சுவை யவிநயம், உருத்திாச்சுவை யவிநயம் என்று சுவைக்குரிய அபிநயங்களே ஒன்பதாகப் பிரித்திருக் கிருர்கள். - - .

விான் ஒருவன் தன் வீரம் புலப்பட நிற்கிருன். கதையில் அப்படி ஒரு கட்டம் வருகிறது. நடிப்பவன் என்ன என்ன அபிநயங்களைச் செய்ய வேண்டும்?

அவன் புருவங்கள் தெரியும், கண் சிவக்கும்; கையில் வாளே இறுகப் பிடிப்பான்; பல்லேக் கடிப்பான், உதட்டை மடிப்பான்; நெற்றி சுருங்கும்; அவன் பேச்சில் உறுதி தொனிக்கும், பகைவர்களே அலட்சியம் செய்வான். இன்னும் இவற்றைப்போலச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற அபிநயங்கள் அவன் வீ உணர்ச்சியை வெளிப்படுத்து கிருன் என்பதற்கு அடையாளங்கள். இவ்வாறு நடிப் பதல்ை விாச்சுவை தோன்றும். - - .

விரச்சுவை யவிநயம் விளம்புங் கால முரிந்த புருவமும் சிவந்த கண்ணும் பிடித்த வாளும் கடித்த எயிறும் மடித்த உதடும் சுருட்டிய துதலும் திண்ஒெனன உற்ற சொல்லும் பகைவரை எண்ணல் செல்லா இகழ்ச்சியும் பிறவும் நண்ணும் என்ப நன்குணர்ந் தோரே.

இதில் பிறவும்" என்ற இலக்கணக்காரர் இடம் கொடுத்திருக்கிருர் கலைஞன் ஏதோ கட்டுப்பாட்டுக்குள் அடங்கிச் சூத்திரப் பொம்மைபோல ஒரே மாதிரி செய்வ தாக எண்ணக்கூடாது. அவனுடைய மனேதர்மத்துக்கு ஏற்பச் சந்தர்ப்பத்தை அதுசரித்துத் தன் கலைத் திறத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/126&oldid=610281" இலிருந்து மீள்விக்கப்பட்டது