பக்கம்:பேசாத பேச்சு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பேசாத பேச்சு

களுக்குக் கொடுப்பதுதான் நியாயம். சும்மா இருக்கிற சொம்பேறிகளுக்குக் கொடுப்பது பைத்தியக்காரத்தனம் ! என்று எண்ணி, அதை ஆத்திரத்தோடு அடித்தார். * சும்மா இருக்கிற சாமியாருக்குச் சோறு இல்லை” என்று சொல்லிவிட்டார்.

புதிய தர்மகர்த்தாவிடம் பழைய வழக்கத்தை வற்புறுத்தும் தைரியம் ஒருவருக்கும் வாவில்லை. 'சாமியார் மிகவும் பெரிய மகான். மெளனமாக இருக்கிரு.ர். அவ ருக்குப் பிரசாதம் அளிக்காவிட்டால் பாவம் ' என்று எல்லோரும் கிசுகிசுவென்று பேசிக் கொண்டார்களே ஒழியத் தர்மகர்த்தாவை அணுகிச் சொல்லவில்லை. கடைசியில் யாரோ பேர் இல்லாமல் மொட்டைச் சீட்டு ஒன்றில், " சும்மா இருப்பது என்பது நீங்கள் நினைப்பது போல இழிவான காரியம் அல்ல. நீங்கள் ஒரு நாள் சும்மா இருந்து பாருங்கள். அப்போது அதன் அருமை தெரியும்’ என்று எழுதித் தர்மகர்த்தா கையில் கிடைக்கும்படி செய்தார்.

அதைப் பார்த்த தர்மகர்த்தாவுக்கு முதலில் கோபம் வந்தாலும், உண்மையாகவே சீர்திருத்தம் செய்யவேண்டு மென்ற நோக்கமுடையவாாகையால் கோபத்தை விலக்கி யோசித்துப் பார்த்தார். அப்படியா சங்கதி சும்மா இருக்கிறது அவ்வளவு பெரிய காரியமா ? எங்கே, நான் பார்க்கிறேன் என்று எண்ணி மறுநாள் சும்மா இருக்கும் விாதத்தை மேற்கொண்டார். - -

பேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டார். யாரோ வாத நண்பர் வந்தார். அவரை அறியாமலே, 'வாருங்கள் ” என்று கூற வாய் முக்கியது. அடக்கிக் கொண்டார். எப்படியோ சைகை செய்து அவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/13&oldid=610168" இலிருந்து மீள்விக்கப்பட்டது