பக்கம்:பேசாத பேச்சு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்திரைகள் 125

மருவி நிமிரும் மரபிற் றென்ப.

(பதாகை யென்பதைச் சொல்லுமிடத்து, கட்டை விரல் வளைந்து மற்ற விரல்கள் நான்கும் ஒருங்கே நிற்கும் இலக்கணத்தை உடையது என்று கூறுவர் ஆசிரியர்.]

பற்றிக்கொள்ள ஒன்றும் இல்லாத குறிப்பை இந்த முத்திரை காட்டுகிறது. யாரிடமாவது ஒன்றை நாம் கேட்டு, அவன் இல்லையென்று கூறினால், கையை விரித்து விட்டான்' என்று சொல்வது இங்கே நினைப்பதற்குரியது. -

இல்லையென்று சொல்லி யாசகம் செய்வதையும் இந்த

முத்திரை அறிவிக்கும்.

"துணைக்கரம் விரித்து நீட்டி" என்று யாசகத்துக்கு அங்கமாக இந்தக் கோலத்தை ஒரு புலவர் சொல்லியிருக்கிரு.ர். - r -

இந்த முத்திரைகளைக் கைகள் என்று தமிழில் வழங்குவர். அபிநயங்களே முகத்திலுைம் கண்களாலும் கைகளாலும் பிற அங்கங்களாலும் காட்டுவது கலைத்திறன். இந்த அபிநயத்தை ஆங்கிகாபிநயம் என்று தனிப்பிரிவாகச் சொல்வர். அங்கங்களால் காட்டும் அபிநயம் என்பது அதன் பொருள். r ? . . . . . . . . . . . . - கைகளாலே காட்டும் அபிநயங்களே இரண்டு வகை. யாகப் பிரித்திருக்கிருர்கள்: ஒரே கையில்ை காட்டுவன: இாண்டு கையாலும் காட்டுவன. ஒரு கையாலே காட்டு வனவற்றைப் பிண்டியென்றும், ஒற்றைக் கை யென்றும், இணையர் 'வினேக்கை யென்றும் சொல்லுவர். இரு கை களையும் சேர்த்துச் செய்யும் அபிநயங்களைப் பிணையல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/134&oldid=610289" இலிருந்து மீள்விக்கப்பட்டது