பக்கம்:பேசாத பேச்சு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் பேசுகிறது

பேசுகிற பேச்சைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் நாம் ஒரளவு வல்லவர்களாக இருக்கிருேம் என்பது நம் எண்ணம். வெள்ளைப் பேச்சாக இருந்தால் தெரிந்து கொள்ளலாம். அப்படியில்லாமல் ஆழ்ந்த கருத்துடைய பேச்சாக, அலங்காளமுள்ள பேச்சாக, அறிவுள்ள பேச்சாக

இருந்தால் ஒடுகிற ஒட்டத்திலே கேட்டுப் புரிந்து

கொள்ள முடியாது. இட்டத்தைத் தணித்துக் கொண்டு

கவனித்தால் அத்தகைய பேச்சின் பொருள் உள்ளத்தில் ஊறத் தொடங்கும். பேச்சின் ஆழம் அதிகமாக ஆகக் கேட்பவனுடைய பொறுமையும் ஒருமைப்பாடும் அதிக மாக இருந்தால்தான் பொருளுணர்ந்து இன்புறலாம்.

சிகத் தன்மை மிக்கவர்களுக்குப் பேசுபவர்களுடைய குறிப்பு எளிதிலே விளங்கும். அத்தகைய கூட்டத்தில் புலவர்கள் பேச வேண்டுமென்று விரும்புவார்கள்.

பேசுகின்ற பேச்சின் சுவையை அறிவதற்கே அறிவு வளமும் ரகிகத் தன்மையும் வேண்டுமானல், பேச்ாத பேச்சின் உயர்வை உணர அறிவுப் பக்குவம் மிகுதியாக வேண்டும். சிறந்த ரசிகர்களாகிய கவிஞர்களும், அறிவு

வளம் பெற்ற தத்துவதரிசிகளும் பேசாத பேச்சை

உணரும் வன்மை படைத்திருக்கிருர்கள். உலகம் முழு

வதுமே அவர்களுடன் பேசாமல் பேசுகிறது. மாத்தில் உள்ள ஒவ்வோர் இலையும் ஆண்டவன் புகழைச் சொல்லு

கின்றது” என்று ஒரு மெய்ஞ்ஞானி இயம்புகிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/139&oldid=610294" இலிருந்து மீள்விக்கப்பட்டது