பக்கம்:பேசாத பேச்சு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் பேசுகிறது 135

அந்த உண்மைக்கே அந்த இாண்டு பொருளையும் உதாரணமாக்கிப் பிறகு அதையே நியாயமாக்கியது தத்துவ உலகம். காகதாளிக நியாயம் என்று அது வழங்கும். தமிழில், காக்கையேறப் பனம்பழம் விழுந்தது போல் என்ற பழமொழி அந்த நியாயத்தின் விளக்கங்தான். இப்படியே ஒரு பானைச் ச்ோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்க்கும் ஸ்தாலிபுலாக நியாயம், புழுவை ஊதி ஊதி வண்டாக்கும் பிாமாடே நியாயம் முதலாகப் LJ SÒ L. JG} நியாயங்கள் எழுந்தன.

உலகத்துப் பொருள்கள் பேசாமற் பேசும் உண்மை ఆడిr அறிந்தவர்களுள் தலைசிறந்தவர் தத்தாத்திரேயர். பாகவதத்தில் அவருடைய கதை வருகிறது. அவதாத வேஷமுடைய அம்மாமுனிவர் சுகதுக்கத்துக்கு அதீதமாய் எப்போதும் போனந்த நிலையிலே வீறிகிற்றலைக் கண்டான் யது. என்னும் மன்னன். 'அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றையும் அடையாமல் இவர் சதா ஆனந்தாாக இருக்கிருரே. இந்த இன்ப நிலை எப்படி இவருக்கு வந்தது?’ என்று யோசித்தான். அவரையே கேட்டான் :

நீதிசெய் அறம்பொன் காமம்

நினேந்திலே சிறிதும்; இன்பம் ஏதினில் அடைகின்ருய்?

முனிவர் கூறலானர்: :: உலகத்திலுள்ள பொருள் களெல்லாம் எனக்கு உபதேசம் செய்கின்றன. அவற்றை உணர்ந்து உண்மைநிலை அறிந்து, நன்மை தீமை, புண்ணிய பாவம், துக்க சுகம், விருப்பு வெறுப்பின்றி ஆனந்த

நிலையில் இருக்கிறேன்” என்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/144&oldid=610299" இலிருந்து மீள்விக்கப்பட்டது