பக்கம்:பேசாத பேச்சு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 பேசாத பேச்சு

இவ்வுலகத்துப் பொருள்களே நாமும் காண்கிருேம், உபயோகிக்கிருேம். நம்மிடம் அவை பேசவில்லையே! இவருக்கு மாத்திாம் ரகசியமாக அவை என்ன சொல்லி யிருக்கும்? என்று யோசித்தான் மன்னன். உலகத்துப் பொருள்களில் எவை என்வ தங்களுக்கு எந்த எந்த உண்மையைப் புலப்படுத்தின? திருவாய் மலர்ந்தருள வேண்டும் ' என்று பணிவாக முனிவரைக் கேட்டான்.

"அப்பா, எனக்கு உபதேசம் செய்தவர் ஒருவர் இருவர் அல்ல. முக்கியமாக இருபத்து நான்கு பேர்கள். அவர்களுடைய உபதேசத்தைச் சொல்லுகிறேன் கேள்” என்று சொல்லத் தொடங்கினர். பூமி, நீர், தீ, காற்று, ஆகாசம் என்னும் பஞ்ச பூதங்கள் அவருக்கு உபதேசம் செய்தன. சூரிய சந்திரர்கள் உண்மையை உணர்த்தினர். கடல், மலேப்பாம்பு, மான், காட்டு யானை, விட்டில், மீன், வண்டு, அம்பைச் செய்பவன், குமரி, தேனீ, புரு, வேசி, அன்றில், நாகம், சிலந்தி, சிறு பிள்ளே, வண்டெடுத்த புழு என்ற பொருள்களும் அவருக்குக் குருவாயின. :

சிறந்தன இவை நான் காறும்

சிந்தையிற் குருவென்று ஆக்கி மறந்தரும் இஃது தீதாம்

மற்றிது நன்ரும் என்றிங்கு அறிந்திலன் இன்பம் உற்றேன். * என்று முனிவர் கூறுகிரு.ர். . . ;

. பூமியிலிருந்து பொறுமையைக் க ற் மக்கொண்டேன். அபகாரம் செய்தவர்களுக்கும் உபகாரம் செய்யும் திறத் தைப் பூமி எனக்கு உபதேசித்தது. தன்னை யார் வெட்டி

பாகவதம், ஆசிரியரை உரைத்த அத்தியாயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/145&oldid=610300" இலிருந்து மீள்விக்கப்பட்டது