பக்கம்:பேசாத பேச்சு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 . பேசாத பேச்சு

ஒரு வண்டு ಹfಒ9ು மலர்ந்திருந்த ஒரு மலரிலே சென்று தேன் உண்டது. உடனே அங்கிருந்து பறந்து சென்று மற்ருெரு மலரில் சிறிது தேனை உண்டது. இப் படிச் சிறிது சிறிதாகப் பல மலர்களிலே சென்று தேன் நுகர்ந்து ரீங்காாம் செய்துகொண்டு மிக்க மகிழ்ச்சியோடு பறப்பதை முனிவர் கண்டார். ஆகா எத்தனே அழகியது இதன் செயல் உணவு பற்றிக்கூட ஒர் இடத்திலே பற் றின்றி வாழும் இந்த வாழ்வல்லவா துறவு வாழ்க்கை? என்று எண்ணினர். நாமும் இப்படியே நகரின் ஒவ்வொரு மனேக்கும் சென்று காதலமே பாத்திரமாகப் பிட்சை யேற்று வாழ்வது இன்பநெறி' என்று கண்டு அவ்வாறே செய்யப் புகுந்தார். தேனுண்னும் வண்டுபோல விடு தோறும் பிட்சையேற்றுண்ணும் இதனே, மாதுகா பிட்சை என்பர். மதுகாம் என்பது வண்டுக்குப் பெயர்.

வண்டினம் சிறிது சிறிதெனஅலரும்

மலர்தொறும் வரும்முருகு உவப்பால் உண்டன திரிதல் கண்டனன், யானும்

உரைக்கின்இத் தொழில்அழ கிதென. எண்தரும் நகரின் மண்தொறும் குறுகி

எனதொரு கரமிசை ஐயம் கொண்டனன் சிறிதுசிறிதென உவந்து

கொள்கலத்து ஏற்றிடாது அன்றே.

பிட்சை இவ்வாறு ஏற்கவேண்டும் என்பதை ஒரு வண்டு உபதேசம் செய்ய, மற்ருெரு வண்டு எவ்வாறு ஏற்றல் கூடாதென்பதையும் உபதேசித்ததாம்.

- ஒருநாள் ஒரு தாமரை மலரில் உள்ள தேனுக்கு ஆசைப்பட்ட வண்டு அதில் புகுந்து தேனே உண்ணத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/147&oldid=610302" இலிருந்து மீள்விக்கப்பட்டது