பக்கம்:பேசாத பேச்சு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் பேசுகிறது . . . 139

தொடங்கியது. அந்தத் தாமரையிலே பற்றுக்கொண்டு நாள் முழுவதும் தங்கித் தேனே உண்டு மயங்கியது. மாலைக் காலம் வாவே தாமரை மலர் குவிந்தது. அதன் இதழ்கள் . நெருக்க நெருக்க உள்ளே இருந்த வண்டு மூச்சு விடவும் முடியாமல் இறந்துவிட்டது. மறுநாள் தாமரை மலர் விரிந்தபோது வண்டின் ஒலியில்லை; அதன் பிணந்தான் கிடந்தது. முனிவர் பார்த்தார். 'ஒரு வீட்டிலே தங்கிச் சுவையுள்ள உணவு கிடைக்கிறதென்று இருந்து அருக்கி ல்ை உலகத்துப் பாசம் கம்மை இப்படித்தான் அமிழ்த்திக் கொன்றுவிடும்’ என்று தெரிந்துகொண்டார்.

ஒருமரை மலரே உவந்துமென் முருகுண்டு உறைதரும் ஒருசுரும்பு இரவில் விரியிதழ் குவிஅம் மலர்அகப் பட்டு

விளிந்தது கண்டு.ஒரு நாளும் கருதிய நகரின் ஒருமனே உறைந்து

கடிசுவை உணவுவந்து அருந்தேன். இவ்வாறு இருபத்து நான்கு ஆசிரியரும் பேசாத பேச்சினுல் உணர்த்திய உபதேசங்களே வகுத்துச் சொல்கிருர் முனிவர். -

- 謙, - 勒 - 瓷

. திருவாசகத்தில் ஒரு பாட்டில்,

கேட்டுஆரும் அறியாதான் கேடொன் றில்லான் . கிளையிலான் கேளாதே யாவும் கேட்டான் என்ற சிவபெருமானப்பற்றி மணிவாசகர் சொல்கிரு.ர். கேளாதே யாவுங் கேட்கும் பெருமான் இறைவன். அவ னருளால் மெய்யறிவு படைத்தோரும் உலகத்துப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/148&oldid=610303" இலிருந்து மீள்விக்கப்பட்டது