பக்கம்:பேசாத பேச்சு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் பேசும்

வாயினலே பேசாமல் உள்ளக் கருத்தை வெளிப் படுத்துவதற்குரிய வழிகள் பல இருக்கின்றன. கசுதின மூர்த்தி யோக நிலையிலே சின் முத்தியை காட்டிப் பேரின் பத்தின் தத்துவத்தைச் சனகாதி முனிவர்களுக்குச் சொன்னர். ஞான உலகில் பேசாத பேச்சு உச்ச நிலையில் இருக்கிறது. மனம் ஒருமைப்பட்டு வாக்கும் எண்ணமும் கடந்த தருணத்தில் பேசிப் பயன் இல்லை.

இவ்வாறே காதல் உலகத்திலும் வாக்கினலே வெளி யிடுவதற்கு அரிய உணர்ச்சிகள் பேசாத பேச்சினுலே வெளியாகின்றன. மலானது செவ்வி வந்தபொழுது மலர்ந்து மணம் பாப்புவதுபோல, காதல் உணர்ச்சி தக்க தருணத்தில் வெளிப்பட்டு இன்பம் விளைவிக்கிறது. காதலர் தமக்குள் ஒருவரை ஒருவர் கண்டு உணர்ந்துகொள்ளும் இந்த அற்புதமான நிகழ்ச்சியில், பேச்சு மிகவும் தாழ்ந்த நிலத்தில் இருக்கிறது. பேசாத மெளனமே காதல் డిగా கிலத்தின் கானமாக நிலவுகிறது.

அப்படியானல் பேச்சில்லாமல் ஒருவரை ஒருவர் உணர்ந்துகொள்ளும் வழி என்னவென்று கேட்கக் தோன்றுகிறதல்லவா? பேசாத பேச்சு அங்கே உதவு கிறது. அங்கே வாய் பேசுவதில்லை; கண் பேசுகிறது

ராமன், விசுவாமித்திர முனிவருடைய யாகத்தைக் கெடுக்க வந்த தாடகையைச் சங்காாம் செய்து, அகலி .

கைக்கு முன்னே புருக்கொடுத்து, அம் முனிவரோடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/21&oldid=610176" இலிருந்து மீள்விக்கப்பட்டது