பக்கம்:பேசாத பேச்சு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பேசாத பேச்சு

பேசாமலே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துக் கொண் டார்கள். உள்ளம் மாத்திரமல்ல, உயிரே மாறிப் புகுந்து விட்டனவாம்!

இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்.

இப்படி மாறிப் புகும்படியான காரியத்தை வாய்ப் பேச்சினலே சாதித்துக் கொள்ள முடியுமா ? ஆயுள் முழுவதும் பேசினல்கூட முடியாது. காரணம் அந்தப் பேச்சிலே அடங்காத விஷபம் பல இருக்கின்றன. பேச்சுல கத்துக்குப் புறம்பே உணர்ச்சி உலகம் இருக்கிறது. அந்த உலகத்தின் நிழலே, நிறமற்ற, உருவத்தின் விவரமற்ற பிண்டமான கிழலையே வாய்ப் பேச்சு வெளியிடுகிறது. உணர்ச்சியை உள்ளவாறு வெளியிட வேண்டுமானல் பேச்சினலே பயன் இல்லை. .

- பிரிந்தவர் கூடினுற் பேசவும் வேண்டுமோ என்று கம்பர் சொல்கிரு.ர். பேச வேண்டிய அவசியம் இல்லை ; பேசவும் வேட்கை இாது. வாய்ப் பேச்சுக்கு மேற்பட்ட பாஷை ஒன்று இருக்கும்போது இந்த உபயோகமற்ற பேச்சுக்கு அங்கே வேலை இல்லை. -

காதல் உலகத்தில் ஈயன பாஷைக்கு உள்ள மதிப்

பைத் தமிழர்கள் நன்கு உணர்ந்திருக்கிரு.ர்கள். இலக்கணப் புலவர்கள் தமிழ்ப் பாஷைக்கு இலக்கணம் வகுத்ததோடு இந்தப் பாஷையைப் பற்றியும் சிறிது சொல்வியிருக் கிரு.ர்கள். - -

எல்லாப் பிறப்பினும் இன்றியமையாமையால், உள்ள மும் உணர்வும் உயிரும் ஒன்றி, ஒரு காலைக்கு ஒரு கால் அன்பு முதலியன சிறந்து நிற்கும் காதலனும் காதலியும் தங்கள் ஊழ்வினையின் வசத்தால் ஓரிடத்தில் சந்திப்பார்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/25&oldid=610180" இலிருந்து மீள்விக்கப்பட்டது