பக்கம்:பேசாத பேச்சு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பேசாத பேச்சு

ஒன்றுபடுத்துவது அதன் வேலை: அவன் காதலை அவள் உணரும் செவ்வி வந்ததும், இந்த ஊழ்வினேயாகிய பால் அவ்விருவரையும் எங்கே இருந்தாலும் நெட்டித் தள்ளிக் கொண்டுவந்து, இதோ இவளைப் பார்” என்று அவனுக்கும், 'இவனைப் பார்த்துக் கண்ணுல் பேசு’ என்று அவளுக்கும் ஆணையிடுகிறது. இந்தக் காதல் நாடகத்துக்குச் சூத்திாதாரி பால்வரை தெய்வம்.

'ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் - உம்மைக் காலத்து (முன் காலத்து) எல்லாப் பிறப்பினும் இன்றியமையாதது, உயிரொன்றி ஒரு காலைக்கு ஒரு கால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய பால் வரை தெய்வத்தின் ஆணையாலே.”

பால்வரை தெய்வம் என்பது ஊழ்வினையை வரை யறுக்கும் கடவுளேச் சுட்டியது. பால் என்பதும் பால் வரை தெய்வமென்பதும் விதிக் கடவுளேக் குறிப்பவை. அந்தத் தெய்வத்தின் கட்டளையாலே காதலனும் காதலியும்

காண்பார்கள்.

காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் இன்றி யமையாகவாாகிப் பத்துப் பொருத்தம் உடையவர்களாக இருக்கவேண்டுமாம். இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு நட்சத்திரப் பொருத்தம் முதலிய பத்துவகைப் பொருக் தங்களைப் பார்க்கிரு.ர்கள். தொல்காப்பியர் கூறும் பொருத்தம் வேறு. பிறப்பு, ஒழுக்கம், ஆண்மை, பிசாயம், உருவம், அன்பு, நிறை, அருள், அறிவு, செல்வம் என்ற பத்தும் ஒத்தவர்களாகக் காதலர்கள் இருக்கவேண்டும். பால்வரை தெய்வம் இத்தகைய காதலர்களேயே ஒன்று படுத்தும். இந்தப் பொருத்தங்களுள் சில விஷயங்களில் காதலன் உயர்ந்தவனுக இருந்தாலும் குற்றம் இல்லையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/27&oldid=610182" இலிருந்து மீள்விக்கப்பட்டது