பக்கம்:பேசாத பேச்சு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகமும் கண்ணும் 23 இல்லை; தன்னுடைய ஒளியிலுைம் கிழவிலுைம் முக மானது அதற்கு உருவம் வகுத்துக் காட்டுகின்றது. பேச் சாலே உணர்த்தற்கு அரிய உள்ளத்து உணர்ச்சியை முகம் பேசாத பேச்சினலே உணர்த்துகிறது.

கண்ணுடிக்கு எதிரே எந்தப் பொருளேக் கொண்டு போனுலும் அந்தப் பொருளின் நிறத்தையும் வடிவையும் அப்படியே - அது காட்டுகிறது. முகமும் அத்தகையது தான். கண்ணுடிக்கு எதிரில் உள்ள பொருளே நாம் காண முடியும். முகத்தில் குறிப்பிக்கப் பெறும் கருத்தை நாம் காண முடியாது. உள்ளத்தின் ஆழத்தே புதைக்

திருப்பது அ ஆ .

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். --குறள், 706,

(கடுத்தது - மிக்க உணர்ச்சியை.)

ஒருவருக்கு அளவற்ற கோபம் வருகிறது. வார்த்தை கள் எழுவதில்லை. கை கால்கள் பதறுகின்றன. அந்தக் கோபத்தைச் செயற்கையாற் காட்ட அவர் தொடங்கு வதற்கு முன்பே அறிவாளியாக இருக்கிற ஒருவன் அவர் கோபத்தை உணர்ந்துகொள்ளலாம். முகத்திலே எள் ளும் கொள்ளும் வெடிக்கும்' என்று சொல்வதில்லையா ? உள்ளத்தில் குமுறும் வெப்பமானது முகத்திலே கொப்பு னிப்பதை அறிந்துகொள்ளலாம். -

அப்படியே மகிழ்ச்சி உண்டாவதையும் முகத்தாலே உணர்ந்து கொள்ளக்கூடும். உரையும் செயலும் அந்த உணர்ச்சிகளே வெளிப்படுத்துவதற்கு முன்பே, முகமானது விரைவில் அவற்றைப் புலப்படுத்திவிடும். ஆகையால் முகத்தைக் காட்டினும் அறிவுடைய பொருள் வேறில்லை என்று திருவள்ளுவர் சொல்கிருர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/32&oldid=610187" இலிருந்து மீள்விக்கப்பட்டது