பக்கம்:பேசாத பேச்சு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பேசாத பேச்சு

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ? உவப்பினும் காயினும் தான்முந் துறும். - -குறள், 707 மனமாகிய அாசனுக்கு முன்னே செல்லும் தனது வனப்போலப் பாக்குச் சொல்லுகின்றதாம் முகம். ஒரு வன் உள்ளத்துள்ளே மகிழ்ச்சியை அடைந்தாலும் கோபத்தை அடைந்தாலும் அதனைத் தான் தெரிந்து கொண்டு முன்னலே வந்து புலப்படுத்தி கிற்கும் ; ஆகை யால் முகத்தைக் காட்டிலும் புத்திசாலி யார் இருக்கிருர் கள்?’ என்று கேட்கிருர் வள்ளுவர்.

பெரிய மனிதர்கள் அதிகமாகப் பேசமாட்டார்கள். அவர்களுடைய குறிப்பை அறிந்து வேலை செய்யும் ஏவ லாளர்கள் அருகில் இருக்கவேண்டும். பெரிய மன்னர் களாக இருந்தால் அதிக மெளனம் சாதிப்பார்கள். அவர் கள் அப்படி இருப்பதுதான் அழகு. எடுத்ததற்கெல்லாம் ஒரு பிரசங்கம் செய்வதாக இருந்தால் அரசியற் காரியம் ஒன்றும் நடைபெருது. செய்யவேண்டியவற்றைக் குறிப்பி ேைல உணர்த்தத் தெரிந்த அரசனும், அவன் குறிப்பை உணரும் அமைச்சர்களும் இருந்தால் அரசியல் ஒழுங்காக நடைபெற்றவரும். அரசனுடைய குறிப்பை உணரும் > ஆற்றல் அமைச்சர்களுக்கு இருக்கவேண்டும் என்று o 'குறிப்பறிதல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் வற்புறுத்துகிரு.ர். ;

அாசன் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கிருன், பிற நாட்டுப் பெரியார் பலரோடு பேசிக்கொண்டிருக்கிருன். அப்போது வேறு நாட்டிலிருந்து தாதன் ஒருவன் வந்து எதையோ சொல்கிருன். அவனுக்குத் தக்க விடை கொடுத்து அனுப்பவேண்டும். பெரியவர்கள் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கிருர்கள். மன்னனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/33&oldid=610188" இலிருந்து மீள்விக்கப்பட்டது