பக்கம்:பேசாத பேச்சு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகமும் கண்ணும் 25

அந்தப் பேச்சில் ஈடுபட்டிருக்கிருன். தாதன் கின்று கொண்டே இருக்கிருன். காரியம் நடக்கவேண்டுமே. அாசன் துரதனேப் பார்த்துப் பேசுவது உசிதம் அன்று : பெரியவர்களே அவமதித்ததுபோல் ஆகும். இந்த நிலையில் அமைச்சன் அரசனது உள்ளக் கருத்தை உணர வழி தேடுகிருன். இவனுக்கு விடை சொல்லவில்லையே!” என்று இடைமறித்துக் கேட்கலாமா ? அதைக் காட்டி லும் அதுசிகம் வேறு இல்லை. தானுகத் தீர்மானம் செய்து ஒரு காரியத்தைச் செய்யலாமா ? அதுவும் நீதியன்று. அரசன் கருத்தைத் தெரிந்து அதன்படி செய்வதே அமைச்சனது கடமை. அவன் கருத்தை உணர்வது எப் படி ? அரசனுடைய அகத்தை நோக்கவேண்டும். அகத் துக்குள்ளே புகுந்து நோக்க அமைச்சனல் முடியுமா ?

அரசன் அமைச்சன் பக்கம் திரும்புகிருன் பார்க்க அளவிலே அரசனது. உள்ளக் குறிப்பை அமைச்சன் உணர்ந்துகொள்ளுகிருன். தாதனுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லி அனுப்பி விடுகிருன்

தன்னுடைய முகத்தை நோக்கின மாத்திரத்திலே அதன் மூலமாக அகத்தையும் கோக்கும் ஆற்றலையுடைய அமைச்சர் இருந்துவிட்டால் அரசன் வாயினலே இது செய் என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவர் கள் தன் முகத்தை நோக்கும்படியாக அவர்களைப் பார்த் தாலே போதும். - -

முகம்தோக்கி நிற்க அமையும், அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். - குறள், 708 அரசியலில் ஒரு காரியம் செய்யவேண்டுமென்ற கருத்தை உடைய அாசன், தன் மனத்தைக் குறிப்பினல் அறிந்து, செய்யவேண்டுமென்று தான் நினைத்த காரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/34&oldid=610189" இலிருந்து மீள்விக்கப்பட்டது