பக்கம்:பேசாத பேச்சு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமாயணத்தில்

அநுமனே முதல் முதலில் கண்ட ராமபிரான் அவனது அறிவின் திறத்தையும், பேச்சின் செம்மையையும் கண்டு வியக்கின்றன். யார்கொல் இச் சொல்லின் செல்வன்!” என்று யோசிக்கிருன். முனிவர்களிலும் வான வர்களிலும் அவனைப் போன்ற சொற்றிறம் உடையவர் வேறு யாரும் இலர் என்று கருதுகின்ருன் சுருங்கிய சொற்களிலே செறிந்த பொருளே உணர்த்தும் ஆற்றல் உடையவன் அநுமன். இடத்துக்கும் காலத்துக்கும் மக்களுக்கும் ஏற்பப் பேசும் அவனது போற்றலைக் கம்பர் நன்முகப் புலப்படுத்திச் செல்கிரு.ர்.

பேசவேண்டிய இடத்தில் ஈன்முகப் பேசும் ஆற்றல் பெற்றவர்கள், பேச வேண்டாத இடத்தில் பேசாமலே இருக்கவும் சக்தி உடையவர்களாக இருப்பார்கள். பேசாத பேச்சாகிய குறிப்புக்களால் விஷயத்தைப் புலப்படுத்தும் திறமையும் அவர்கள்பால் காணக்கிடக்கும். அநுமன். பேசும் பேச்சிலும் வல்லவன் ; பேசாத பேச்சிலும் வல்லவன்.

மாருகி கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றன். ஊரெல்லாம் தேடிய பிறகு அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமனது நிலையை அறிவித்துச் சூளாமணியை அப் பிராட்டியினிடமிருந்து பெற்ற, சென்ற காரியத்தை நிறை வேற்றினன். அதுகாறும் ாமதாதனுக இருந்த அவன் தன் விரக்கைப் புலப்படுத்தும் சந்தர்ப்பம் நேர்ந்தது. பொழில் இறத்து, ராவணன் அனுப்பிய கிங்காரை

பே. 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/42&oldid=610197" இலிருந்து மீள்விக்கப்பட்டது