பக்கம்:பேசாத பேச்சு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - பேசாத பேச்சு

மாருகியின் மேனி முழுதும் புண்கள் இருந்தன. வானா விார் அவற்றைக் கூர்ந்து நோக்கினர். அவனுடைய தாள்களிலும் மார்பிலும் தோளிலும் தலையிலும் கைகளி லும் புண்களைப் பார்த்தனர்; வாளாலே வெட்டிய புண்கள் சில; வேலாலே குத்தியன சில; அம்பு துளைத்ததனுல் உண் டானவை சில. இப்படி இருந்த புண்களே யெல்லாம் பார்த்து உயிர் உக உலந்து உயிர்த்தார். அவை எப்படி வந்தன என்று யோசித்தனர். ஆம் பொல்லாத அாக் கர்கள் சும்மா விடுவார்களா? இவன் ஒருவன். அவர்கள் பலர். பலவகை ஆயுதங்களைக் கொண்டு எதிர்த்திருக் கிருர்கள். இந்த மகா வீரன் ஒருவனே அவ்வளவு பேருக் கும் ஈடு கொடுத்திருக்கிருன். இவனுடைய திருமேனியி லுள்ள புண்கள் அவ்வளவும் இவன் வீரத்தைக் காட்டும் ஆபரணங்கள். வேறு யாராவது சென்றிருந்தால் அதோ கதிதான். இவன் அவர்களே வென்று இங்கே மீண்டான். இவன் வெற்றியை இதிலே கண்டோம் என்று உணர்ந்து அவ் வீரர் ஆரவாரித்தனர். -

தெற்கே பார்த்தார்கள். ஒரே புகை மயமாக இருங் கது. அந்தப் புகை அவர்களோடு பேசியது. அநுமன் இலங்கையைக் கொளுத்திவிட்டு வந்திருக்கிருன் ” என்று அது ஒதியது. - . . . .

போனுனே, உடன்ே சீதையைக் கொண்டுவர வில்லையே! என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு உண். டாகியிருக்கலாம். அடுத்தபடி, ராட்சசர்கள் மிக்க வலி யுடையவர்கள்; அவர்களே இவ்வொருவனே வெல்ல முடியாது போலும் ராமபிரானது அம்பு. பசித்திருக்கிறது. அதற்கு இரையாக அரக்கர் இருக்கின்றனர் ” என்ற எண்ணம் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/45&oldid=610200" இலிருந்து மீள்விக்கப்பட்டது